×

வாகனத்திற்கு அனுமதி மறுப்பால் விரக்தி: கல் குவாரியில் 2,000 லிட்டர் பாலை ஊற்றிய வியாபாரி

போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி, பாளேகுளி கிராமத்தை சேர்ந்தவர் மாதேஷ். இவர் கிராமங்களில் உள்ள விவசாயிகளிடம் பால் சேகரித்து, அதனை மொத்தமாக தினமும் தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்துள்ள தனியார் பால் நிறுவனத் திற்கு விற்பனைக்காக அனுப்பி வைப்பார். தற்போது கொரோனா காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டு போக்குவரத்து தடை செய்யப்பட்டதால் பால் நிறுவனங் கள் 50% பால் வாங்குவதை நிறுத்தியுள்ளது. இதனால் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பகுதிக்கு பால் செல்வது தடை செய்யப்பட்டது.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மாதேஷ், 2000 லிட்டர் பாலை கொண்டு சென்ற போது, மாவட்ட எல்லையில் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டு, பால் திருப்பி அனுப்பப்பட்டது.  இதனால் அவர் 2000 லிட்டர் பாலையும் காவேரிப் பட்டணத்தில் உள்ள பால் குளிரூட்டும் அறையில் வைத்துள்ளார். தொடர்ந்து இன்று காலை பாலை வேனில் ஏற்றி கொண்டு காவேரிப்பட்டணம், காரிமங்கலம், கிருஷ்ணகிரி என பல்வேறு பால் கம்பெனிகளுக்கு சென்றுள்ளார். ஆனால் யாரும் பால் வாங்காததால், வேறு வழியின்றி கிராமத்தில் உள்ள கல்குவாரியில் 2000 லிட்டர் பாலை கொட்டினார்.

இந்த பால் பாறைகளில் இருந்து அருவி போல் வழிந்தோடி மண்ணில் கலந்து வீணானது.  இதனை பார்த்த அப்பகுதி இளைஞர்கள் செல்போன்களில் வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இச்சம்பவம் போச்சம்பள்ளியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Trader ,stone quarry , Stone quarry, milkman
× RELATED லாரி மோதியதில் வியாபாரி பலி