×

சென்னையில் ஊரடங்கை பயன்படுத்தி முதியவர்களை தாக்கிவிட்டு மர்மநபர்கள் கொள்ளை: சிசிடிவி வெளியீடால் மக்கள் பீதி!!!

சென்னை: சென்னையில் முழு ஊரடங்கை பயன்படுத்தி முதியவர்களை தாக்கிவிட்டு மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். கொரோனா தொற்றின் காரணமாக தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதிலும் ஒவ்வொரு ஞயிற்றுக்கிழமையும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, ஊரடங்கை பயன்படுத்தி கொள்ளையர்கள் பல இடங்களில் கைவரிசையை காட்டி வருகின்றனர். இந்நிலையில், சென்னை மயிலாப்பூரில் பிரபலமான தனியார் நகைக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் திருநாவுக்கரசு என்பவர் காவலாளியாக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 2 மர்ம நபர்கள் காவல் பணியில் இருந்த திருநாவுக்கரசை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனைத்தொடர்ந்து, அவரிடமுள்ள பணத்தையும் கொள்ளையர்கள் திருடி சென்றுள்ளனர். இந்த காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இதேபோல், கன்னியம்மாள் மற்றும் சங்கரன் ஆகிய 2 முதியவர்களிடமும் கொள்ளையர்கள் கைவரிசையை காட்டியது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், இந்த சிசிடிவி வெளியீடால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.

Tags : release ,robbers ,Chennai ,CCTV , Chennai, Mysteries, Robbery, CCTV
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...