×

ஈரானில் இரண்டரை கோடி பேருக்கு கொரோனா: மேலும் மூன்றரை கோடி பேருக்கு தொற்று பரவும் அபாயம்..! அதிபர் வெளியிட்ட தகவலால் மக்கள் அதிர்ச்சி!!!

தெக்ரான்: ஈரானில் இரண்டரை கோடி பேர் கொரோனாவால் தாக்கப்பட்டிருப்பதாகவும் மேலும் மூன்றரை கோடி பேர் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும் என்று அந்நாட்டின் அதிபர் ஹசன் ரஃபானி தெரிவித்திருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரானில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மீண்டும் கட்டுப்பாடுகளை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பு வெளியிடும் முன், நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் தோன்றி அதிபர் ஹசன் ரஃபானி உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், ஈரானில் இரண்டரை கோடி பேர் கொரோனா தாக்குதலுக்கு ஆளாகியிருப்பதாக குறிப்பிட்டார். மேலும் மூன்றரை கோடி பேருக்கு தொற்று பரவ வாய்ப்பிருப்பதாகவும், 14 ஆயிரம் பேர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்துவிட்டதாகவும் ரஃபானி தெரிவித்துள்ளார். எனவே மீண்டும் கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது கட்டாயமாகியுள்ளதாக அவர் தெரிவித்திருக்கிறார். ஈரானில் 2 லட்சத்து 71 ஆயிரத்து 606 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஆனால் அதிபர் கோடி கணக்கில் பாதிப்பு என்று கூறியது அந்த நாட்டு மக்கள் மட்டுமின்றி உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ஈரான் சுகாதாரத்துறை அமைச்சகம், கொரோனா பாதிப்பு குறித்து அதிபரின் பேச்சு ஆய்வு அறிக்கையில் கொரோனா பரவல் குறித்த கணிப்பின் அடிப்படையிலானது என்று விளக்கம் அளித்துள்ளது. ஈரானின் தலைநகர் தெக்ரான் உள்பட நாடு முழுவதும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Iran ,Corona ,Chancellor , Iran, Corona, President
× RELATED இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய...