×

விழுப்புரத்தில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்புகள்: நோயாளிகளை அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் கிடைக்காததால் மக்கள் அவதி!!!

விழுப்புரம்: விழுப்புரத்தில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்படுவதால், நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதில் ஆம்புலன்ஸ் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் இன்று புதிதாக 89 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2225ஆக அதிகரித்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆனால், இதுவரை விழுப்புர மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வெறும் 6 ஆம்புலன்ஸ்கள் மட்டுமே பயன்பாட்டில் இருப்பதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும், ஆம்புலன்ஸ் கிடைக்காததால் கொரோனா நோயாளிகளை அவர்களது உறவினர்களே மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, உறவினர்களுக்கும் தொற்று ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இதேபோல், பல ஊர்களில் அம்புலன்ஸ் கிடைகாத்ததால், கொரோனா நோயாளிகளை வீடுகளிலேயே தனிமைப்படுத்துவதால், குடும்ப உறுப்பினர்களுக்கும் தொற்று ஏற்படுகிறது.

எனவே கொரோனா நோயாளிகளை மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்வதற்கு கூடுதலான ஆம்புலன்ஸை இயக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உடனடியா நடவடிக்கை எடுக்கவேண்டுமென பொதுமக்கள் அனைவரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Viluppuram , Villupuram, Corona, Ambulance
× RELATED பெண் பயணிகளை ஏற்றாமல் சென்ற ஓட்டுநர் சஸ்பெண்ட்!!