×

வடமாநில தொழிலாளர்கள் குறைந்ததால் வேகம் குறைந்த அதிவிரைவு சாலை பணி: மண்ணும் தட்டுபாடு

நாகர்கோவில்: குமரியில் கொரோனா காரணமாக பெரும்பாலான வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றதால் நான்கு வழிச்சாலை பணி தொய்வு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் பிரதான சாலைகள் மூலம் நாட்டை ஒன்றிணைக்கும் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் கனவு திட்டமாக  தங்க நாற்கர சாலை திட்டம் தீட்டப்பட்டது. இதற்காக முதன்முறையாக  குமரியில் கடந்த 2004ம் ஆண்டு ஜூரோபாயின்டில் பிரதமர் வாஜ்பாயால் தங்க நாற்கர சாலை திட்டத்திற்கு அடிக்கல் நடப்பட்டது. ஆனால், குமரியை தவிர நாடு முழுவதும் இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டு விட்டது.

முதன்முதலாக கன்னியாகுமரி மதுரை இடையிலான நான்கு வழிச்சாலையில் நரிக்குளம் பகுதியில் குளத்தை பாதிக்காமல் 4 வழிச்சாலை அமைக்க தொடர்ந்த வழக்கு காரணமாக  இந்த சாலை  பணி நடைபெறவில்லை. இதுபோல் குமரி திருவனந்தபுரம் இடையே நிலம் எடுத்தல், சில பகுதிகளில் எதிர்ப்பு காரணமாக இந்த திட்டம் கிடப்பில் கிடந்தது. இந்நிலையில் பொன்.ராதாகிருஷ்ணன் மீண்டும் மத்திய சாலை போக்கு வரத்து அமைச்சர் ஆன பின்னர் நான்கு வழிச்சாலை திட்டத்தை அமல் படுத்த முயற்சி கள் மேற்கொண்டார்.

இதன்படி, நீண்ட போராட்டத்திற்கு பின்னர் முற்றிலும் புதிய வழித்தடத்தில் கட்டிடங்கள் பாதிப்பு மிகவும் குறைவாக இருக்கும் வகையில் நான்கு வழிச்சாலை அமைக்க நடவடிக்ைக மேற்கொள்ளப்பட்டது. மேலும் இழப்பீடு தொகை உயர்த்தி வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து  2016ம்ஆண்டு ஜூலை மாதம் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இதன்படி கேரள எல்லையான காரோடு முதல் வில்லுக்குறி வரை ஒரு பேக்கேஜ்ஜாகவும்,  வில்லுக்குறி முதல் கன்னியாகுமரி மற்றும் காவல் கிணறு பெருங்குடி வரை 43 கி.மீ 2வது பேக்கேஜ் ஆகவும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையே இன்டாக் அமைப்பு சார்பில் பசுமை தீர்ப்பாயத்தில் தொடரப்பட்ட வழக்கு காரணமாக இடையில் சில  மாதங்கள் பணிகள் தடை பட்டன. மேலும் மண் கிடைக்காமலும் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டது. பசுமை தீர்ப்பாயம் குளங்கள், நீர் நிலைகள் பாதிக்கப்படாமல், அவற்றின் மீது கூடுதல் பாலங்கள் அமைத்து, திட்டத்தை செயல்படுத்த பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்தது. இதன்படி காவல்கிணறை அடுத்த பெருங்குடி முதல் அப்டா சந்தை இடையே 90 சதவீத பணிகள் நிறைவடைந்து விட்டன. தோவாளை குமரன்புதூர் அருகே ரயில்வே பாலம் அமைக்க ரயில்வே அனுமதி கிடைத்தால், நாகர்கோவில் காவல் கிணறு சாலையில் போக்குவரத்து தொடங்கி விடும்.

புத்ேதரி பொற்றையடி இடையே தேரூரில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டு விட்டால், இங்கும் போக்குவரத்து தொடங்கி விடும். இதற்கிடையே கொரோனா தொற்று காரணமாக நான்குவழிச்சாலை அமைக்கும் பணிகள் தடைபட்டு விட்டன. ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டதை அடுத்து கடந்த 1ம் ேததி முதல் பணிகள் தொடங்கினாலும், மண் தட்டுபாடு ஒரு புறமும், மறுபுறம் தொழிலாளிகள் இன்றி பணிகள் மிகவும் தொய்வு ஏற்பட்டுள்ளன.  இதுபற்றி  பணிகளை மேற்கொண்டு வரும் அதிகாரி ஒருவர் கூறியதாவது: நான்கு வழிச்சாலை பணியில் சுமார் ஆயிரம் பணியாளர்கள் வரை ஈடுபட்டிருந்தனர்.

இவர்கள், மேற்கு வங்கம், பீகார், ஜார்கண்ட், உத்திரபிரதேசம், ஓடிசா ஆகிய மாநிலங்களை சேர்ந்தவர்கள். இதில், 600க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் அவர்கள் சொந்தர மாநிலங்கள் சென்று விட்டனர். தற்போது அவர்கள் திரும்பி வர ரயில்கள் இல்லை. எனவே இங்கு இருக்கும் 300 தொழிலாளர்களை கொண்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் இருரயில்வே பாலங்கள், 24 குளங்கள் பணிகள் மட்டுமே மேற்கொள்ள வேண்டும். இதற்கு அடுத்த மாதம் டெண்டர் விடப்பட உள்ளது. எனவே விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு விடும் என்றார்.

கூடன்குளத்திலிருந்து மண்
தற்போது சாலை பணிகளுக்கு கூடன்குளத்தில் இருந்து மண் கொண்டு வர நெல்லை மாவட்ட கலெக்டர் மூலம் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுபோல் ரயில்வே பாலங்கள் முடிக்க இன்னும் சில நாட்களில் ரயில்வே அதிகாரிகளுடன் ஆலோசணை நடைபெற உள்ளது. எனவே அனுமதி கிடைக்கும் பட்சத்தில், சில வாரங்களில் இந்த பாதைகள் தயாராகிவிடும். புத்தேரி வில்லுக்குறி இடையே புத்தேரி பெரிய குளத்துடன் சேர்த்து, 8  குளங்களும், பொற்றையடி முதல் முருகன்குன்றம் இடையே 4 குளங்களும், வில்லுக்குறி காரோடு இடையே 12 குளங்களிலும் இன்னும் பாலங்கள் அமைக்கப்பட வேண்டியுள்ளது.

Tags : North , Northern Labor, Expressway work
× RELATED வடகிழக்கு மாநில மக்களை மோடி அரசு...