×

மனஅழுத்தத்தை குறைக்க காவல் துறையினருக்கு மூன்று நாட்கள் பயிற்சி: டிஜிபி உத்தரவு

சென்னை: மனஅழுத்தத்தை குறைக்க காவல் துறையினருக்கு மூன்று நாட்கள் பயிற்சி அளிக்க டிஜிபி உத்தரவிட்டுள்ளார். பதற்றமான சூழலில் மக்களிடம் எப்படி நடந்து கொள்வது என்பது குறித்து பயிற்சி அளிக்கப்படுவதாக கூறப்படுகிறது. தமிழகம் முழுவதும் மன அழுத்தத்தில் உள்ள 1,025 காவல்கள் பயிற்சிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர் எனவும் கூறப்பட்டுள்ளது. சாத்தான்குளம் சம்பவத்தை அடுத்து காவலர்களுக்கு பயிற்சி அளிக்க டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

Tags : Three days ,training, police,reduce, DGP orders
× RELATED குழந்தைகளின் மன அழுத்தத்தை போக்க கவுன்சலிங்: இலவச தொலைபேசி எண் அறிவிப்பு