×

அசோக் கெலாட் தலைமையிலான அரசின் பெருமான்மையை நிரூபிக்க புதனன்று ராஜஸ்தான் சட்டமன்றம் கூடுவதாக தகவல்!

ஜெய்ப்பூர்: அசோக் கெலாட் தலைமையிலான அரசின் பெருமான்மையை நிரூபிக்க புதனன்று ராஜஸ்தான் சட்டமன்றம் கூட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜெய்ப்பூரில் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவை கெலாட் மீண்டும் சந்தித்ததை தொடர்ந்து சட்டமன்றம் அடுத்தவாரம் கூடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் அரசுக்கு ஆதரவு அளிப்பதாக பாரதிய பழங்குடியினர் கட்சி உறுதிப்படுத்திய கடிதத்தை ஆளுநரிடம் கெலாட் அளித்தார். இதனை தொடர்ந்து அவர் தமது அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க தயாராகி விட்டதாகவும், இதற்காக புதனன்று சட்டமன்ற கூட்டத்தை கூட்டவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சபாநாயகர் அனுப்பிய தகுதி நீக்க நோட்டீஸ்க்கு எதிராக சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் சார்பில் தாக்கல் செய்த வழக்கு 21ம் தேதி செவ்வாய் அன்று விசாரணைக்கு வரவுள்ளது. இதனை கருத்தில் கொண்டு புதனன்று சட்டமன்றத்தில் அரசின் பலத்தை நிரூபிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அரசுக்கு 109 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதாக கெலாட் கூறியுள்ளார். ஆனால் தமக்கு ஆதரவாக உள்ள 30 எம்.எல்.ஏக்களின் அணிவகுப்பை நடத்த தயார் என்று பைலட் தெரிவித்து வருகின்றார். இதனிடையே தொலைபேசி ஒப்புக்கேட்டு புகார் தொடர்பாக ராஜஸ்தான் தலைமை செயலாளருடன் மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை கேட்டிருப்பதால் பரபரப்பு நிலவுகிறது.

Tags : Rajasthan Legislative Assembly ,Ashok Kelad ,government ,Ashok Kejriwal , Rajasthan Assembly, meet,Ashok Kejriwal , Wednesday
× RELATED ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கம்பி...