×

கர்நாடகத்தில் பாதுகாப்பு இல்லை!: கொரோனா வார்டில் நாய், பன்றிகள் சுற்றித்திரியும் அதிர்ச்சி.. கல்புர்கி மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு!!!

பெங்களூரு: கர்நாடகாவில் கொரோனா சிகிச்சை மையங்களில் பன்றிகள், நாய்கள் சுற்றித்திரியும் வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கர்நாடக மாநிலம் கல்புர்கி மாவட்ட அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று காலையில் கல்புர்கி மருத்துவமனையில் பன்றிகள் கூட்டமாக உலாவும் வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பன்றிகள் சுற்றிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியதை அடுத்து, கல்புர்கி அரசு மருத்துவமனைக்கு சென்ற மாவட்ட ஆட்சியர், பன்றிகளை விரட்ட நடவடிக்கை மேற்கொண்டார்.  

மேலும், பன்றிகளை விரட்டாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பன்றிகளின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் கூறியிருக்கிறார். இது அப்பகுதியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இதனிடையே யாத்கிரி அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சை வார்டில் நாய் ஒன்று சுற்றித்திரியும் வீடியோவும் சமூக வலைத்தளங்களில்  வெளியாகியுள்ளது. அங்குள்ள அதிகாரிகள் மீது இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. கர்நாடக மாநிலத்தில் பெங்களூருவுக்கு அடுத்தபடியாக கல்புர்கி, யாத்கிரியில் கொரோனா பாதிப்பு அதிகம் இருப்பது குறிப்பிடத்தக்கது

Tags : hospital ,Karnataka ,ward ,Kalpurgi ,Corona ,District Collector ,Dog , No security , Karnataka,Dog, pigs ,Corona ward, shock, Kalpurgi hospital
× RELATED டெல்லியில் உள்ள அப்போலோ...