×

பொன்னேரி பாஜ சார்பில் கொரோனா விழிப்புணர்வு

பொன்னேரி: பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கொரோனா நோய் தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் நேற்று நடந்தது. இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்.எம்.ஆர்.ஜானகிராமன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் பத்மநாபன், மாநில பொதுச்செயலாளர் இருசப்பன், வெளிமாநில தொடர்பு மாவட்ட தலைவர் பிரகாஷ் சர்மா, பொன்னேரி நகர பொறுப்பாளர் நந்தன், தாமரை சோமு சங்கர், மோகன், கோட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு ஏகத்துவ ஜமாஅத் மாநிலத் தலைவர் வேலூர் இப்ராஹிம் கலந்துகொண்டு கொரோனா நோய் தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் குறித்தும், கந்த சஷ்டி பற்றி அவதூறாக பேசியதைக் கண்டித்தும் விளக்கிப் பேசினார். பின்னர் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு கொரோனா தடுப்பு மருந்து கபசுர குடிநீர் வழங்கி பொன்னேரி பஜார் முழுவதும் உள்ள கடைகளுக்கு சென்று துண்டுப்பிரசுரங்களை வழங்கினார்.  அப்போது பாஜ நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் மற்றும் இளைஞர்கள் உடனிருந்தனர்.


Tags : Ponneri Baja ,Corona ,BJP Ponneri , Corona awareness ,BJP Ponneri
× RELATED தெற்கு ரயில்வே சார்பில் தூய்மை வாரம் அனுசரிப்பு