×

மழுவங்கரணை ஊராட்சியில் பராமரிப்பு இல்லாத விளையாட்டு திடல்

மதுராந்தகம்: சித்தாமூர் ஒன்றியம் மேல்மருவத்தூர் அடுத்த மழுவங்கரணை ஊராட்சியில் சோத்துப்பாக்கம்-சித்தாமூர் நெடுஞ்சாலையில் தமிழக அரசு சார்பில், விளையாட்டு திடல் கட்டப்பட்டுள்ளது. இங்கு, சிறுவர்கள் விளையாடுவதற்கான ஊஞ்சல், சறுக்கு கம்பம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு உபகரணங்கள்  அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், இவை நீண்ட நாட்களாக ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், இந்த விளையாட்டு உபகரணங்கள் அனைத்தும் உடைந்தும், அறுந்தும் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுகின்றன. தற்போது, மழை பெய்து வருவதால் விரைவாக இவை அனைத்தும் துருப்பிடித்து வீணாகி போகும் நிலை உள்ளது.

மீண்டும் இப்பகுதி சிறுவர்கள், சிறுமிகள் மற்றும் இளைஞர்கள் இதனை முற்றிலும் உபயோகப்படுத்த முடியாத நிலை  ஏற்படும். எனவே, உடனடியாக ஒன்றிய நிர்வாகம், மழுவங்கரணை ஊராட்சி நிர்வாகம் மூலம் இந்த விளையாட்டு உபகரணங்களை சரி செய்தும், புல், பூண்டுகள், முள் செடிகள் முளைத்து காணப்படும் இப்பகுதியை சீரமைத்தும் தர வேண்டும் என அப்பகுதி சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், இளைஞர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : playground ,Pantheon , Pantheon, playground
× RELATED குமரி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த...