×

பிளாஸ்மா தானம் தந்த எம்எல்ஏ

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. அதை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் எடுத்து வருகிறார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, நாட்டிலேயே முதல் முறையாக தெற்கு டெல்லியில் உள்ள கல்லீரல் மற்றும் பித்தப்பை ஆராய்ச்சி மையத்தில் பிளாஸ்மா வங்கியை தொடங்கினார். தற்போது வரை இம்மாநிலத்தில் 3 பிளாஸ்மா வங்கிகள் திறக்கப்பட்டுள்ளன.

இதற்கு, கொரோனா தொற்றில் இருந்து குணமானவர்கள் தங்கள் பிளாஸ்மாவை தானமாக வழங்கும்படி கெஜ்ரிவால் அழைத்து விடுத்துள்ளார். இவருடைய ஆளும் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த கல்காஜி தொகுதி எம்எல்ஏ அதிஷி, கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமாகி இருக்கிறார். மற்றவர்களுக்கு எடுத்துக்கட்டாக விளங்குவதற்காக, தனது பிளாஸ்மா நேற்று இவர் தானமாக வழங்கினார்.


Tags : MLA , MLA ,donated plasma
× RELATED கொரோனா நோயாளிகள் 400 பேருக்கு பிளாஸ்மா சிகிச்சை