×

நிப்டியில் 10 ஆண்டுகளாக தொடர்ந்து வீழ்ச்சி: பங்கு வருமானத்தில் நீண்ட காலமாக ஏமாற்றத்தை சந்திக்கும் முதலீட்டாளர்கள்

தங்கம், நிலையான வருவாயில் பாதிப்பில்லை

மும்பை: இந்திய பங்கு சந்தை வர்த்தகத்தில் தொடர்ந்து வீழ்ச்சி இருப்பதால், பங்கு வருமானத்தில் நீண்டகாலமாக முதலீட்டாளர்கள் ஏமாற்றத்தை சந்தித்து, தற்போது ஆபத்தான கட்டத்தில் இருக்கின்றனர் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் பங்கு வர்த்தக முதலீடுகள் கடந்த சில ஆண்டுகளாக வெகுவாக குறைந்து வருகிறது. இதற்கு நிலையான வருவாயை தராததே காரணம் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். மும்பை பங்கு சந்தையில், பங்கு வருமானம் தொடர்ந்து கடந்த 10 ஆண்டுகளாக சரிவை சந்தித்து வருவதால் முதலீட்டாளர்கள் ஏமாற்றத்தை சந்தித்துள்ளனர். அதிலும் தற்போது அவர்கள் ஆபத்தான கட்டத்தில் இருக்கின்றனர்.

கடந்த 10 ஆண்டுகளில் ஆண்டு வருமானத்தை 9.35 சதவீதமாக நிப்டி ஈட்டியுள்ளது. அதன் மொத்த வருவாய் அட்டவணையில் தபால் அலுவலக நிலையான வைப்புத்தொகை அல்லது பொது வருங்கால வைப்பு நிதி 8 முதல் 8.7 சதவீதமாக இருக்கிறது. இது ஆபத்து இல்லாத நிலையை காட்டுகிறது. அதே நேரத்தில் கடந்த 5 ஆண்டுகளில், பங்கு வர்த்தகம் மோசமான நிலையில் உள்ளது. உலக தங்க கவுன்சிலின் தரவுகளின் படி, இதே காலக்கட்டத்தில் தங்கத்தின் கூட்டு ஆண்டு வளர்ச்சி விகிதம் (சிஏஜிஆர்) 8.45 சதவீதமாக இருக்கிறது. பங்கு கணக்கீடு ஒவ்வொரு ஆண்டும் ஜூலையை மையமாக கொண்டு இருப்பதால், அம்மாதத்தில் சராசரி விலையை நிர்ணயிக்கின்றனர்.

நடப்பாண்டு, நுழைவு மற்றும் வெளியேறும் விலை நிப்டி 50 மதிப்பாக கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டிலும் 12 மாதங்களில் ஏற்படும் நிலையற்ற தன்மையை சரிசெய்ய இந்த நிர்ணயம் ஜூலையில் ஏற்படுத்தப்படுகிறது. இவ்வாறு கடந்த 5 ஆண்டுகளாக கணக்கிடப்பட்ட பங்கு வருவாய் 7 சதவீதமாக மட்டுமே இருக்கிறது. கடந்த 2013ம் ஆண்டு மிக அதிகபட்சமாக 20.3 சதவீதத்தை எட்டிய பின்னர், தொடர்ந்து 7 ஆண்டுகளாக பங்கு வருமானம் கீழ்நோக்கி சென்று கொண்டிருக்கிறது.  கடந்த 10 ஆண்டு வருமானம், 10 சதவீதத்திற்கும் குறைவாகவே இருக்கிறது. இது மற்ற சொத்து வகுப்புகளுடன் ஒப்பிடும்போது, பங்கு வருமானம் லாபகரமானது அல்ல என டால்டன் கேபிட்டல் ஆலோசனை மைய இயக்குநர் யு.ஆர்.பட் தெரிவித்துள்ளார்.


Tags : Nifty ,Investors , Nifty, fall, stock returns, investors
× RELATED மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 135...