×

மின்கணக்கீட்டு முறையில் சந்தேகமா? இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்: மின்வாரியம் தகவல்

சென்னை: மின்கணக்கீட்டு முறையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை: வீட்டு மின் பயனீட்டாளர்கள் தங்களின் மின் கட்டண தொகைக்கான விபரங்களை அறிந்துகொள்ள மின் கட்டண விபர இணையத்தளத்திலோ (TANGEDCO - Bill Status) அல்லது மின் கட்டணம் செலுத்துவதற்கான இணையதளத்தின் (TANGEDCO - Online Payment Portal) மூலமாகவோ தெரிந்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.

முந்தைய மாத மின் கட்டண தொகையையே கணக்கீடு செய்யப்பட்டுள்ள நுகர்வோர்கள் பின்னர் அடுத்த கணக்கீட்டில் கணக்கிடப்பட்ட மொத்த தொகை எவ்வாறு கணக்கிடப்பட்டுள்ளது என்பதை தெரிந்துகொள்ள, இணையதளத்தின் வாயிலாக, கணக்கிடப்பட்ட மொத்த தொகையை கிளிக் செய்து முழு விபரங்களை தெரிந்துகொள்ளலாம். மேற்கண்ட மின் கணக்கீட்டு முறையில் மின் நுகர்வோருக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், சம்பந்தப்பட்ட உதவி பொறியாளர் அலுவலகத்தை அணுகவும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Accounting, Website, Electricity Board
× RELATED திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு...