×

பிளஸ் 2 தேர்வு எழுதாதவர்களுக்கு 27ம் தேதி தேர்வு; 30ம் தேதி ரிசல்ட்: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

கோபி:  ‘‘பிளஸ் 2 தேர்வு எழுதாதவர்களுக்கு இந்த மாதம் 27ம் தேதி தேர்வு நடத்தப்பட்டு. 30ம் தேதி முடிவுகள் வெளியிடப்படும்,’’ என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். ஈரோடு மாவட்டம் கோபி அருகே நால்ரோட்டில் பள்ளி மாணவ, மாணவர்களுக்கு யூ டியூப் மூலம் வழங்கப்படும் கல்வி குறித்து தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
 பிளஸ் 2 தேர்வு எழுதாதவர்களுக்கு இந்த மாதம் 27ம் தேதி தேர்வு நடைபெறும். 30ம் தேதிக்குள், அவர்களுக்கு ரிசல்ட் வெளியிடப்படும்.

தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலிப்பது குறித்த நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த தீர்ப்பை முழுமையாக படித்த பின்புதான் அதற்கான விளக்கம் கூற முடியும். தற்போது அதைப்பற்றி எதுவும் கூற முடியாது.  பள்ளிகளுக்கு ஆண்டுக்கு ஒருமுறை வழங்கப்பட்ட தடை இன்ைம சான்றை, இந்த அரசு பொறுப்பேற்ற பின்புதான் 2 ஆண்டாக மாற்றி இருக்கிறோம். ஆண்டுக்கு ஒருமுறை அவர்கள் தடை இன்மை சான்றை புதுப்பித்துக்கொள்வதை காட்டிலும், 2 ஆண்டுக்கு aஒருமுறை புதுப்பிப்பது ஏன் என்றால் அந்த பள்ளிகளை சேர்ந்தவர்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று பல இடங்களில் அனுமதிகளை வாங்க வேண்டியுள்ளது.

தற்காலிகமாக வழங்கப்படுகிற இந்த சான்று எதற்காக என்று சொன்னால், மாணவர்கள் பாதுகாப்பு ஒன்று. இரண்டாவது பள்ளிக்காக  வைத்திருக்கிற வாகனங்களுக்கு அனுமதி பெற இது தேைவ. இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்.

Tags : Senkottayan ,Plus 2 ,Minister Senkottayan , Plus 2 Exam, Result, Minister Senkottayan
× RELATED பிளஸ்-2 மாணவியை காதலித்து கர்ப்பமாக்கிய ஐடிஐ மாணவர்