×

திருச்சியில் உப்பாற்றில் மூழ்கி 3 குழந்தைகள் பலி

மண்ணச்சநல்லூர்:  திருச்சி மாவட்டம் சிறுகனூரை சேர்ந்தவர் முகம்மதுஇலியாஸ்(38). இவரது மகள் ஆஷிராபானு (11). இவர், தம்பி முகம்மது ஹாசின் (8). பக்கத்து வீட்டை சேர்ந்தவர் ஆதம்ஷா(40). இவரது மகள் ரிஸ்வானா (10). இந்நிலையில் நேற்று, ஆஷிராபானுவின் பாட்டி தவுலத்பீவி ஆடு மேய்க்க சென்றார். அப்போது, 3 பேரும் பாட்டியோடு சென்றனர். உப்பாறு அருகே ஆடு மேய்த்துக்கொண்டு இருந்தார். அந்நேரத்தில் உப்பாற்றில் இறங்கி குளித்தனர். ஆனால், ஆழம் அதிகமாக இருந்ததால் தண்ணீரில் மூழ்கி கூச்சலிட்டனர். ஊர் மக்கள் வந்து காப்பாற்றுவதற்குள் இறந்துவிட்டனர்.

Tags : Trichy. 3 ,Trichy , Trichy, Upparu, 3 children killed
× RELATED குழந்தைகளிடம் உரையாடத் துவங்குவோம்..!