×

பணியில் சேர்ந்த ஒரே வாரத்தில் மயிலாப்பூர் துணை கமிஷனருக்கு கொரோனா

சென்னை: மயிலாப்பூர் துணை கமிஷனராக பணியாற்றிய தேஷ்முக் சேகர் சஞ்சய் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து சமீபத்தில் பணியில் சேர்ந்தார். இதனிடையே, போலீஸ் உயர் அதிகாரிகள் பலர் இடமாற்றம் செய்யப்பட்டனர். அதன்படி, சைபர் கிரைம் துணை கமிஷனராக இருந்த செஷாங் சாய் மயிலாப்பூர் துணை கமிஷனராக பதவி ஏற்றார்.  பணியில் சேர்ந்த ஒரு வாரத்தில் அவருக்கு காய்ச்சல், சளி இருந்ததால், கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டதால், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது டிரைவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால், அவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதேபோல் சென்னை அசோக் நகர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் உட்பட 15 போலீசாருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானது.


Tags : Deputy Commissioner ,Corona ,Mylapore , Mylapore Deputy Commissioner, Corona
× RELATED சென்னை மயிலாப்பூரில் கஞ்சா விற்பனை செய்த 2 இளைஞர்கள் கைது