×

கூடலூர் அருகே தோட்டத்தில் சேற்றில் சிக்கி உயிரிழந்த காட்டு யானை

கூடலூர்: நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள வேடன் வயல் பகுதியில் 20 வயதுள்ள ஆண் யானை கால்கள் சேற்றில் புதைந்ததால் வெளியேற முடியாமல் உயிரிழந்தது. நீலகிரி கூடலூரை அடுத்த வேடன் வயல் பகுதியில்  காட்டு யானைகள் அடிக்கடி வந்து சென்றன. இப்பகுதியில் உள்ள விளை  நிலங்களில் பாக்கு மரங்களை காட்டு யானைகள் ஒடித்து சாப்பிட்டு சேதப்படுத்துவது வழக்கமாக இருந்தது. இந்நிலையில் நேற்று இங்குள்ள தனியார் தோட்டத்திற்கு சென்ற இப்பகுதி மக்கள் அங்கு யானை ஒன்று படுத்திருப்பதை கண்டு பயந்து போய் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து கூடலூர் வனச்சரகர் ராமகிருஷ்ணன் மற்றும் வனக்காவலர் பிரதீப்குமார் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்த போது, சுமார் 20 வயதுள்ள காட்டு யானை சேற்றில் சிக்கி வெளியேற முடியாமல் உயிரிழந்தது தெரியவந்தது. நேற்று முன்தினம் இரவு இப்பகுதிக்கு வந்த காட்டு யானை சேற்றில் சிக்கி இருக்கலாம் என்றும் அதிலிருந்து வெளியேற முடியாத நிலையில் யானை உடல் சோர்வடைந்து உயிரிழந்திருக்கலாம் என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர். இருந்த போதிலும் யானையின் உடலை முழுமையாக பரிசோதனை செய்த பின்னரே யானை இறந்ததற்கான காரணம் தெரியவரும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். 


Tags : Cuddalore ,garden , Cuddalore, mud, wild elephant
× RELATED ஆட்டோ மீது லாரி மோதியதில் இருவர் உயிரிழப்பு