×

நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்: காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த புகாரை அடுத்து போலீசார் ஆய்வு செய்ததில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தகவல்

சென்னை: சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சற்று நேரத்திற்கு முன்பு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு அழைப்பு வந்தது. அந்த அழைப்பில் அஜித் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக தகவல் தெரிவித்துவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார். இதனையடுத்து மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அஜித் வீட்டில் சோதனை செய்து செய்தனர். வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாய்களுடன் சுமார் 10 காவல்துறையை சேர்ந்தவர்கள் அஜித் வீட்டில் சோதனை மேற்கொண்டு வந்தனர்.

சோதனைக்கு பின்பு தொலைபேசியில் வந்த மிரட்டல் புரளி என தெரிய வந்துள்ளது. மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது குறித்து நீலாங்கரை போலீசார் சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் ஆய்வு செய்தனர். தற்போது அந்த அழைப்பு விழுப்புரம் பகுதியில் இருந்து வந்திருப்பதாக முதற்கட்ட தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொலைபேசியில் அழைத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரின் அலைபேசி சிக்னல் விழுப்புரம் பகுதியில் காட்டுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல நடிகர் விஜயின் சாலிகிராமம் இல்லத்தில் வெடிகுண்டு இருப்பதாகவும் தகவல் வந்தது. அதுவும் விழுப்புரம் பகுதியில் இருந்து தான் வந்திருந்தது.

பிறகு காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று தெரிய வந்தது. அதேபோல தற்போதும் விழுப்புரம் பகுதியில் இருந்து அழைப்பு வந்திருப்பதால் யார் அழைத்து இந்த வெடிகுண்டு மிரட்டலை விடுத்தது? என்ற விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.


Tags : Ajith ,house ,police control room , Actor Ajith, bomb threat
× RELATED வலிமை படப்பிடிப்பில் விபத்து: நடிகர் அஜித் குமார் காயம்