×

புதுச்சேரியில் மாணவர்களுக்கு 4 கிலோ அரிசி, ரூ.250 பணம் வழங்கப்படும்: கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில்  மாணவர்களுக்கு 4 கிலோ அரிசி, ரூ.250 பணம் வழங்கப்படும் என அம்மாநில கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் அறிவித்துள்ளார். உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் 10,38,716 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 34,884 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 671 பேர் மரணமடைந்துள்ளனர். இதனால், கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 26,273 ஆக உயர்ந்துள்ளது.

இதற்கிடையில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம், புதுச்சேரியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. பள்ளிகள் திறக்கப்படாததால், மாணவ, மாணவிகள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர். மேலும், ஊரடங்கால் பல்வேறு தொழில்கள் முடங்கியுள்ளது. புதுச்சேரியிலும் பெரியளவில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்  புதுச்சேரியில் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 4 கிலோ அரிசி மற்றும் ரூ.250 பணமும் வழங்கப்படும் என அம்மாநில காவலித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் அறிவித்துள்ளார். மேலும், 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 4 கிலோ அரிசி, ரூ.330 வழங்கப்படும். மதிய உணவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து மாணவர்களுக்கு அரிசி, பணம் வழங்கப்படும், என அவர் கூறியுள்ளார்.


Tags : Kamalakkannan ,Pondicherry ,announcement , Puducherry, Students, Rice, Money, Education, Minister Kamalakkannan
× RELATED வாலாஜாபாத் வடக்கு ஒன்றிய பகுதிகளில்...