×

வேதாரண்யம், கோடியக்கரை கடலில் ஆடி அமாவாசை தினத்தன்று புனித நீராட பக்தர்களுக்கு தடை

வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோயில் மூர்த்தி, ஸ்தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையது. வேதங்கள் பூசை செய்து மூடிக்கிடந்த கதவை அப்பரும், சம்மந்தரும் தேவார பதிகங்கள் பாடி கதவு திறந்ததாக வரலாறு. அகத்திய முனிவருக்கு சிவபெருமான் திருமணக்கோலத்தில் காட்சி கொடுத்த ஸ்தலம். இப்படி பல்வேறு சிறப்புகள் பெற்ற வேதாரண்யத்தில் ஆடி அமாவாசை, தைஅமாவாசை, மகாளாய அமாவாசை மகோதை புண்ணிய காலங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து கடலில் புனித நீராடி மூதாதையர்களுக்கு திதி கொடுத்த திருமண கோலத்தில் அமைந்துள்ள சிவபெருமானை வழிபடுவது காலம் காலமாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக பக்தர்களை அனுமதிப்பதா? வேண்டாமா? என்பது குறித்து ஆலோசனை கூட்டம் ஆர்டிஓ பழனிகுமார் தலைமையில் நடைபெற்றது.

தாசில்தார் முருகு முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கடலோர காவல் குழும போலீசார், நகர காவல் துறை நகராட்சி நிர்வாகம், கோவில் நிர்வாகம் மற்றும் அனைத்து துறையினர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் இந்த அமாவாசை தெட்சநாயன புண்ணிய கால அமாவாசை என்றும் 20ம் தேதி (திங்கட்கிழமை) வருவதால் மிகசிறப்பு வாய்ந்தது. இதனால் சுற்று வட்டாரம், பிறமாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு வாகனங்களில் இங்கு வரவாய்ப்புள்ளது. கொரோனா பரவலை முன்னிட்டு அரசு தடை உத்தரவும் சில கட்டுப்பாடுகளும் விதித்து உத்தரவிட்டுள்ளது. அதனால் வெளிமாவட்டம், வெளியூர் மற்றும் உள் கிராமங்களிலிருந்து யாரும் கடலில் புனித நீராட அனுமதி இல்லை. கோயில்களும் திறக்கப்படமாட்டாது என கூட்டத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டது.

Tags : place ,moon ,devotees ,Vedaranyam , Vedaranyam, Kodiakkarai, Audi Amavasai, Prohibition
× RELATED 3வது இடத்துக்கு சீமானுடன்தான் போட்டி...