×

கொள்ளிடம் ஆற்றின் வலது கரையில் ஜல்லி பெயர்ந்துள்ள சாலையை சீரமைக்காவிட்டால் போராட்டம்: விவசாயிகள் அறிவிப்பு

கொள்ளிடம்: கொள்ளிடம் ஆற்றின் வலது கரை சாலையை மேம்படுத்தாவிட்டால் சாலை மறியல் போராட்டம் நடத்த போவதாக விவசாயிகள் சார்பில் அறிவிக்கப்பட்டது. நாகை மாவட்டம், கொள்ளிடம் சோதனை சாவடியிலிருந்து கொள்ளிடம் ஆற்றின் வலது கரை சாலையில் உள்ள ஜல்லி கற்கள் பெயர்ந்து போக்குவரத்துக்கு தடையாக உள்ளது. இந்த ஆற்றாங்கரை சாலை மேம்படுத்தும் பணி 10 வருடங்களுக்கு முன்பு நடைபெற்றது. பின்னர் இந்த சாலையை மேம்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால், கொள்ளிடம் குத்தவக்கரை, சிதம்பரநாதபுரம், கீரங்குடி, மடப்புரம், சோதியங்குடி கொன்னக்காட்டுப்படுகை, மாதிரவேளூர், படுகை, பட்டியமேடு, பூங்குடி, வாடி, சென்னியநல்லூர், பட்டியமேடு, வடரங்கம், எலத்தூர், சோத்திரம் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். இருசக்கர வாகனங்களில் செல்லும் பலர் அடிக்கடி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். இது குறித்து விவசாயிகள் சார்பில் கொள்ளிடம் சமூக ஆர்வலர் காமராஜ் கூறுகையில்,10 வருடத்துக்கும் மேலாக மேம்படுத்ததபடாத கொள்ளிடம் ஆற்றின் வலது கரை சாலையை உடனடியாக மேம்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் கொள்ளிடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் மாபெரும் சாலை மறியல் போராட்டம் நடத்த போவதாக தெரிவித்தார்.

Tags : bank ,gravel road ,announcement ,Kollidam river , Kollidam, road, struggle, farmers
× RELATED தனியார் நிதி நிறுவனங்களிடம் முதலீடு...