×

அர்ச்சகர்கள், ஊழியர்கள் என 150க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி...: திருப்பதி கோவிலில் பக்தர்கள் தரிசனத்தை நிறுத்த தேவஸ்தானத்துக்கு போலீஸ் பரிந்துரை!

திருப்பதி : திருப்பதி கோவிலில் பக்தர்கள் தரிசனத்தை நிறுத்த தேவஸ்தானத்துக்கு போலீசார் பரிந்துரை செய்துள்ளனர். திருப்பதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொற்று பரவல் கடந்த சில நாட்களாக அதிகரித்து கொண்டே வருகிறது. திருப்பதி மலையில் பணியாற்றும் தேவஸ்தான ஊழியர்கள், அர்ச்சகர்கள், பாதுகாப்பு பணியாளர்கள் என 150க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவில் ஜீயர்களான சடகோப ராமானுஜ பெரிய ஜீயர், சடகோப ராமானுஜ சின்ன ஜீயர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும், தற்போது திருப்பதியிலுள்ள தனிமைப்படுத்தல் முகாமில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனால், ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் அனைத்துக் கைங்கரியங்களுக்கும் ஜீயர்கள் கண்காணிப்பாளர்களாகச் செயல்படுவதால்,  அவர்கள் சிகிச்சை முடிந்து மடத்திற்குத் திரும்பும்வரை ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் கைங்கரியங்களைக் கண்காணிப்பது யார் என்கிற கேள்வி தற்போது எழுந்துள்ளது. கோவில் பணியாளர்கள், அர்ச்சகர்கள், ஜீயர்கள் என தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதால் திருப்பதி கோவிலில் பக்தர்கள் தரிசனத் தற்காலிக  தடை விதிக்குமாறு  தேவஸ்தானத்துக்கு போலீசார் பரிந்துரை செய்துள்ளனர். இதுகுறித்து பரிசீலிக்கப்படும் என்று  நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால், திருப்பதி கோவில் மூடப்படும் நிலை உருவாகியுள்ளது.


Tags : priests ,Tirupati temple ,Corona ,devotees ,darshan , Tirupati, Ezhumalayan Temple, Corona, Devotees Darshan, Police
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...