×

தலைவர்கள் சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு

திருவள்ளூர்: கோவை சுந்தராபுரம் பகுதியில், பெரியார் சிலை மீது மர்ம நபர்கள் காவி வர்ணம் பூசியதால் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள பெரியார் மற்றும் அம்பேத்கர் சிலைகளுக்கு போலீசார் பாதுகாப்பு அளிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இதுகுறித்து மாவட்ட எஸ்பி அரவிந்தன் கூறுகையில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பெரியார் மற்றும் அம்பேத்கர் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில், 103 இடங்களில் உள்ள அம்பேத்கர் சிலைக்கும், இரு இடங்களில் உள்ள பெரியார் சிலைக்கும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்’ என்றார்.  Tags : Police protection , leaders statue
× RELATED தாம் வாழ்ந்ததற்கான அடையாளத்தை அடுத்த...