×

நகரமைப்பு அதிகாரிக்கு கொரோனா

பூந்தமல்லி: திருவேற்காடு நகராட்சியில் பணியாற்றும் நகரமைப்பு அலுவலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு கடந்த இரு தினங்களாக கொரோனா அறிகுறிகள் இருந்த நிலையில், பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  மேலும், திருவேற்காடு நகராட்சி நகரமைப்பு பிரிவு மூடப்பட்டது. அதில் பணியாற்றக்கூடிய நகரமைப்பு ஆய்வாளர் உட்பட 5 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஏற்கனவே, இந்த நகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் இரண்டு ஊழியர்களுக்கும், ஆணையருக்கும் கொரோனா சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  


Tags : Corona ,town planning officer , Corona,town planning officer
× RELATED கொரோனாவுடன் வாழப் பழகிக்கொள்வது எப்படி?