×

இந்தியாவில் 27 கோடி பேர் வறுமையில் இருந்து மீட்பு: ஐநா தகவல்

வாஷிங்டன்:  ஐக்கிய நாடுகள் மேம்பாட்டு துறை மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இணைந்து 75 நாடுகளில் வறுமை ஒழிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டன. இந்த ஆய்வு அறிக்கையை ஐநா வெளியிட்டுள்ளது.  இதில் 75 நாடுகளில் 65 நாடுகள் 2000 முதல் 2019ம் ஆண்டுக்கு இடைப்பட்ட கால கட்டத்தில் அதிக அளவிலான மக்களை ஏழ்மையில் இருந்து மீட்டுள்ளன.  குறிப்பாக இந்தியாவில் அதிக அளவிலான மக்கள் வறுமையின் பிடியில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.கடந்த 2005-2006 மற்றும் 2015-2016ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் இந்தியாவில் 27 கோடி பேர் வறுமையின் பிடியில் இருந்து மீட்டு எடுக்கப்பட்டுள்ளனர்.

இந்த தரவுகள் கொரோனா பாதிப்புக்கு முந்தைய ஆய்வு அறிக்கையாகும். ஆனால் தற்போது கொரோனா நோய் தொற்றின் காரணமாக பொருளாதார ரீதியில் வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. எனவே கொரோனாவின் தாக்கம் ஒவ்வொரு நாட்டின் வளர்ச்சியையும் பாதிக்கக்கூடும் என்றும், உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் வளர்ச்சியில் இந்தியா பின்தங்கக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Tags : UN ,India , India, Poverty, UN
× RELATED கோரிக்கையை புறக்கணிக்கும் இஸ்ரேல்...