×

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் உள்ள நாட்டுப்புற கலைஞர்களுக்கு தலா 1000: நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை

சென்னை: திருநங்கைகள், பழங்குடியின மக்கள், தெருக்கூத்து கலைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு வாரியத்தில் பதிவு செய்தவர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கான நிதியை ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு கட்டுப்பாடுகளுடன் முழு ஊரடங்கை அறிவித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த பகுதிகளில் உள்ள வாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.

அதன் அடிப்படையில் மேற்கண்ட 4 மாவட்டங்களில் உள்ள 501 நாட்டுப்புற கலைஞர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்க 5.01 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து நேற்று அரசாணை வெளியிட்டுள்ளது.அதேபோன்று, 1666 திருநங்கைகளுக்கு தலா ஆயிரம் ரூபாய் வீதம் 16 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கியும், தூய்மைபணியாளர்களுக்கு நிதியுதவி வழங்க 28 லட்ச ரூபாயும், பழங்குடியின மக்களுக்கு 6 லட்ச ரூபாயும் நிதி ஒதுக்கியுள்ளது.


Tags : districts ,Government ,Chennai , Chennai, 4 Districts, Folk Artists, Funding
× RELATED அமைச்சர் அறிவிப்பு அனைத்து...