×

முதலாமாண்டு மாணவர் சேர்க்கை அரசு, தனியார் கல்லூரிகளில் இணையதளம் மூலமே விண்ணப்பம்

சென்னை: அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் இணையதளம் மூலமாக மட்டுமே முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகள் சேர்க்கை விண்ணப்ப பதிவு நடைபெற வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா நோய் தொற்றினை தவிர்க்கும் பொருட்டு, அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2020-21ம் கல்வியாண்டிற்கான முதலாம் ஆண்டு மாணவ - மாணவிகள் சேர்க்கை விண்ணப்ப பதிவு வருகிற 20ம் தேதி (திங்கள்) முதல் இணையதளம் மூலமாக மட்டுமே மேற்கொள்ள வேண்டும்.சேர்க்கை தொடர்பான ஏதேனும் சந்தேகம் இருந்தால் 044-22351014, 044-22351015 என்ற எண்களில் தொடர்பு கொண்டு விவரம் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : colleges ,government , First year student, government, private colleges, website, application
× RELATED மருத்துவ மேற்படிப்பில் மாணவர்...