×

ஐஐடி சேர்க்கையில் சலுகை

புதுடெல்லி: கொரோனா பாதிப்பால், பல்வேறு கல்வி வாரியங்களின் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதால், இந்தாண்டு ஐஐடி மாணவர் சேர்க்கையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் பொக்ரியால் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், ‘‘இந்தா ண்டு, ஐஐடி மாணவர் சேர்க்கைக்கான தகுதியில் சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் நேரடியாக ஐஐடியில் சேர தகுதி பெற்றவர்கள் ஆவர். அவர்களின் பிளஸ் 2 மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது’’ என தெரிவித்துள்ளார். இதற்கு முன், ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வில் தேர்ச்சி பெறுவதோடு, பிளஸ் 2 தேர்வில் 75 சதவீத மதிப்பெண் அல்லது டாப் 20 ரேங்கில் இடம் பெற்றிருக்க வேண்டும்.Tags : IIT , IIT admission
× RELATED மருத்துவ மேற்படிப்பில் மாணவர்...