×

காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம்: இன்று 2 இடங்களில் நடைபெறுகிறது

காஞ்சிபுரம் :காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் க.சுந்தர்  எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிவிப்பு: காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம் இன்று  காலை 9 மணிக்கு மதுராந்தகம் நகர திமுக அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் செய்யூர், மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிகளைச் சேர்ந்த திமுக நிர்வாகிகள் கலந்துகொள்ள வேண்டும். இதனைத் தொடர்ந்து காலை 10 மணிக்கு காஞ்சிபுரம் திருக்கச்சி நம்பி தெருவில் உள்ள கலைஞர் பவள விழா மாளிகையில் நடைபெற உள்ள அவசர செயற்குழு கூட்டத்தில் காஞ்சிபுரம் மற்றும் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிகளைச் சேர்ந்த திமுக நிர்வாகிகள் கலந்துகொள்ள வேண்டும்.

கொரோனா பாதிப்பால் 2 இடங்களில் நடைபெறும் இந்த அவசர செயற்குழு கூட்டத்தில் மின் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி வரும் 21.7.2020 அன்று அனைத்து வீடுகளின் முன்பு கருப்புக் கொடி ஏற்றி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது. எனவே, திமுக  நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயற்குழு - பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய - நகர - பேரூர் செயலாளர்கள், அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் உள்ளிட்ட அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று அந்த அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.


Tags : places ,Kanchipuram South District DMK Executive Committee Meeting: Today , Kanchipuram .South District, DMK Executive Committee Members Meeting
× RELATED திருத்தணி, பள்ளிப்பட்டில் கொசஸ்தலை...