×

புழல் சிறையில் கைதி தற்கொலை

புழல்: செங்குன்றம் அடுத்த நல்லூர் ஆட்டந்தாங்கல் மண்ணடி கோவில் தெருவை சேர்ந்தவர் துளசிராம் (எ) ராம் (35). இவர், தனது மனைவியை கொன்ற வழக்கில் புழல் விசாரணை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், தனியறையில் தனது லுங்கி மூலம் ஜன்னல் கம்பியில் நேற்று மாலை தூக்குப்போட்டு துடித்துக் கொண்டிருந்தார். அப்போது ரோந்து பணியில் இருந்த காவலர்கள் அவரை மீட்டு  சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினர்.


Tags : Prisoner ,suicide ,jail ,prison ,Puzhal , Puzhal prison, prisoner, suicide
× RELATED நீதிமன்ற வளாகத்தில் பிளேடை விழுங்கிய கைதி: ஆலந்தூரில் பரபரப்பு