×

திட்டக்குடி அருகே மாடுகளை தாக்கும் மர்ம நோய் பொதுமக்கள், விவசாயிகள் அச்சம்; கால்நடைத்துறை முகாம் நடத்த கோரிக்கை

திட்டக்குடி: கடலூர் மாவட்டம் திட்டக்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மாடுகளை மர்ம நோய் தாக்குவதால் இப்பகுதி மக்கள், விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். எனவே கால்நடைத்துறை முகாம் நடத்தி தடுப்பூசி போட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடலூர் மாவட்டம் திட்டக்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட கோழியூர், வதிஷ்டபுரம், இளமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 100 க்கும் மேற்பட்ட மாடுகளுக்கு உடலில் அதிகளவில் கொப்புளங்கள் தோன்றி உள்ளன. அதுமட்டுமின்றி ஒருசில மாடுகளுக்கு காய்ச்சலும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் வாகன வசதியில்லாததால் கோழியூரில் இருந்து சுமார் 5 கிலோமீட்டர் தூரத்திற்கு மாடுகளை ஓட்டிச்சென்று திட்டக்குடியில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு சிகிச்சை அளிக்க சென்றால் அங்கு போதிய மருந்து இல்லை என்று துண்டு சீட்டில் மருந்து எழுதிக் கொடுத்து தனியார் மருந்தகத்தில் மருந்து வாங்கும் அவலநிலை உள்ளது. ஒரு மாட்டிற்கு மருந்து வாங்க வேண்டும் என்றால் 240 ரூபாய்க்கு மேல் ஆகிறது என மாட்டின் உரிமையாளர்கள் புலம்புகின்றனர்.

தற்போது கொரோனா தொற்றால் நாடு முழுவதும் அவதிப்பட்டு வரும் நிலையில் அன்றாடம் வேலை செய்து பிழைப்பு நடத்தி வரும் எங்கள் நிலைமையை என்னவென்று சொல்வது என வேதனையுடன் கூறுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இக்கிராமங்களில் முகாம் அமைத்து மாடுகளை பரிசோதனை செய்து மாடுகளுக்கு தடுப்பூசி போட வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Tags : camp ,Tittakkudi Public , Planner, Mystery Disease, Public, Farmers, Fear, Veterinary
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு