×

ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசை கவிழ்க்க பேரம்..? மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் மீது வழக்குப்பதிவு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் ஆட்சியை கவிழ்க்க பேரம் பேசிய விவகாரத்தில்  மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட் அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய சச்சின் பைலட் உள்பட 19 எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கக் கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் சபாநாயகரிடம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், அசோக் கெலாட் தலைமையிலான ஆட்சியை கவிழ்க்க காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ பன்வர் லால் சர்மாவிடம் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத், பாஜக தலைவர் சஞ்சய் ஜெயின் ஆகியோர் பேரம் பேசியதாக ஆடியோ நேற்று வெளியானது.

இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், குதிரை பேரத்தில் ஈடுபடும் பாஜகவினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியது. இந்த நிலையில், இது தொடர்பாக இரு வழக்குகளைப் பதிந்த ராஜஸ்தான் காவல்துறையினர் சஞ்சய் ஜெயினைக் கைது செய்துள்ளனர். மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில், ஆடியோவில் உள்ள குரல் தன்னுடையது இல்லை என்றும், இது தொடர்பாக எந்த விசாரணைக்கும் தயார் என்றும் கஜேந்திர சிங் செகாவத் தெரிவித்துள்ளார்.

Tags : government ,Gajendra Singh Sehwag ,Rajasthan ,Congress , Rajasthan, Congress, Union Minister Gajendra Singh Sehwag, case
× RELATED ஒன்றிய அரசு குறித்து அமெரிக்கா மீண்டும் விமர்சனம்