×

மாதனூர் அடுத்த தோட்டாளம் கிராமத்தில் அதிகாரிகள் துணையுடன் படுஜோராக நடக்கும் மணல் கொள்ளை: பொதுமக்கள் குற்றச்சாட்டு

மாதனூர்: மாதனூர் அடுத்த தோட்டாளம் கிராமத்தில் அதிகாரிகள் துணையுடன் மணல் கொள்ளையடிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஆம்பூர் தாலுகா, மாதனூர் அடுத்த தோட்டாளம் ஊராட்சியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேலும், இவர்கள் பாலாற்றில் உள்ள மணல்களை சில சமுக விரோத கும்பல் கொள்ளையடிப்பதால் அப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விவசாயம் மற்றும் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படுமோ என்று அச்சத்தில் உள்ளனர்.

இதையடுத்து, தோட்டாளம் காலனி பகுதி வழியாக செல்லும் பாலாற்றில் தற்போது 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அதிகாரிகளின் துணையோடு காலை 9 மணி முதல் மணலை மூட்டையாக கட்டி இருசக்கர வாகனத்தில் எடுத்து சென்று தோட்டாளம் காளியம்மன் கோயில் அருகே பதுக்கி வைத்து இரவு நேரங்களில் மாட்டு வண்டிகளில் மாதனூர், உடையராஜாபாளையம், கொள்ளாபுரம், தோட்டாளம், தேவிகாபுரம் ஆகிய பகுதிகளில் ₹2,500 முதல் ₹3 ஆயிரம் வரை விற்கின்றனர்.

அவ்வாறு விற்றக்கப்படும் பணத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தினமும் ₹5 ஆயிரம் முதல் ₹10 ஆயிரம் வரை பெற்று செல்கிறார்களாம். இதுகுறித்து, அப்பகுதி பொதுமக்கள் அதிகாரிகளிடம் கேட்டால், ‘உங்கள் வேலையை மட்டும் பார்த்தால் பொதும்’ என கூறுகிறார்களாம். எனவே, சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாக அதிகாரிகள் மணல் கடத்தலை தடுத்து நிலத்தடி நீர் மட்டத்தை பாதுகாக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Tags : village ,Madhanur , Sand looting, Thotta, village, authorities, Public allegation
× RELATED சிவகங்கை மாவட்டத்தில் ஒரு கிராமம் ஒரு...