×

மணல் அள்ளியதில் பிரச்னை டிராக்டர் டிரைலரை பறிமுதல் செய்த போலீசாரை முற்றுகையிட்ட மக்கள்

உசிலம்பட்டி: மணல் அள்ளிய சம்பவத்தில் டிராக்டர் டிரைவலை பறிமுதல் செய்ய வந்த போலீசாரை பொதுமக்கள் முற்றுகையிட்டதார் பரபரப்பு ஏற்பட்டது. எழுமலை அருகேயுள்ள ஜோதில்நாயக்கனூர் மீனாட்சிபுரம் கிராமத்தில் குடியிருப்புகள் மற்றும் அரசு ஆரம்ப பள்ளி அருகே தனிநபருக்கு சொந்தமான கிணறு உள்ளது. இந்த கிணறு பாதுகாப்பின்றி சுற்றுச்சுவர் இல்லாமல் உள்ளது. இந்த கிணற்றில் பள்ளியில் சத்துணவு மையத்தில் சமையல் வேலை செய்யும் முல்லைக்கொடி தவறி விழுந்து முதுகுதண்டுவடம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு ஆடு ஒன்றும் கிணற்றில் விழுந்து விட்டது.

இந்த கிணற்றின் சுற்றுச்சுவர் உயரத்தை அதிகரிக்க ஊர் பொதுமக்கள் முடிவு செய்தனர். அதற்காக இந்த பகுதியில் உள்ள மணலை டிராக்டரில் அனுமதியின்றி அள்ளி கிணற்றின் ஓரத்தில் கொட்டினர். இதுபற்றி தகவல் கிடைத்த எழுமலை போலீசார் நேற்று வந்து வயலில் உழுதுவிட்டு வந்த டிராக்டரின் இன்ஜினை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர் மாலை வேளையில் போலீசார் ஊருக்குள் நின்றிருந்த டிராக்டர் டிரைலரை எடுக்க, வேறு டிராக்டர் இன்ஜினை எடுத்து வந்தனர். அப்போது அங்கிருந்த கிராமமக்கள் போலீசாரை எடுக்க விடாமல் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த ஒரு வாரத்திற்கு முன்னதாக மணல் அள்ளியதற்கு இன்று வந்து டிராக்டரை பறிமுதல் செய்வதா என முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் உசிலம்பட்டி டிஎஸ்பி ராஜா, இன்ஸ்பெக்டர்கள் தினகரன், சார்லஸ் மற்றும் காவல்துறையினர் ெபாதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். மணல் அள்ள அனுமதி வாங்காதது சட்டப்படி குற்றம். அதனால் இது சம்மந்தமாக வழக்குப்பதிவு செய்துதான் ஆக வேண்டும் எனக்கூறி டிராக்டர் டிரைலரை எடுத்து கொண்டு எழுமலை போலீஸ் நிலையம் சென்றனர். டிஎஸ்பி ராஜா சமாதானப்படுத்தியதால், பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Tags : problem, sand ,people, police,onfiscated,tractor trailer
× RELATED தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு