×

நெல்லையில் பரிதாபம் லாரிகள் மோதலில் 2 மாடுகள் சாவு

நெல்லை: மதுரையிலிருந்து சுமார் 15 மாடுகளை ஏற்றிக்கொண்டு நாகர்கோவிலை நோக்கி நேற்றிரவு லாரி சென்று ெகாண்டிருந்தது. இதுபோல் பாளையிலிருந்து கோதுமை மூடைஏற்றிய லாரி மதுரை நோக்கி சென்றது. நெல்லை வண்ணார்பேட்டை வடக்கு பைபாஸ் சாலையில் ரயில்வே பாலம் அருகே கோதுமை லோடு லாரியின் முன்பக்க டயர் வெடித்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த லாரி திடீரென அங்கு வந்து கொண்டிருந்த மீட்பு வாகனம் மீது மோதி எதிரே மாடுகளை ஏற்றி வந்த லாரி மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 2 காளை மாடுகள் இறந்தன. மேலும் லாரி டிரைவரான ஆலங்குளத்தை சேர்ந்த சுபாஷ் (35) மற்றொரு லாரி டிரைவர் உள்ளிட்ட 4 பேர் படுகாயமடைந்தனர்.

இதனையறிந்து அங்கு வந்த பாளை தீயணைப்பு நிலைய வீரர்கள், டவுன் போலீஸ் உதவி கமிஷனர் சதீஷ்குமார், தச்சநல்லூர் இன்ஸ்பெக்டர் வனசுந்தர் மற்றும் போலீசார் ஆகியோர் படுகாயமடைந்த 4 பேரையும் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவத்தையடுத்து அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதுகுறித்து மாநகர விபத்து தடுப்பு பிரிவு போலீசார் விசார ணை நடத்தி வருகின்றனர்.

Tags : truck accident , 2 cows ,killed , truck accident
× RELATED தெலுங்கானா மாநிலம் டேங்கர் லாரி...