பட்டிவீரன்பட்டி அருகே தோட்டத்தில் சிக்கிய 12 அடி மலைப்பாம்பு

பட்டிவீரன்பட்டி:  பட்டிவீரன்பட்டி அருகே இரையை விழுங்கி நகர முடியாமல் கிடந்த 12 அடி மலைப்பாம்பு பிடிபட்டது. திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள அய்யம்பாளையம் சாத்தான்கரடு பகுதியில் அய்யம்பாளையத்தைச் சேர்ந்த செந்தில்குமாருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் நேற்று வேலையாட்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது சுமார் 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு தோட்டத்தில் படுத்திருப்பதைக் கண்டு அவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். உடனடியாக வத்தலக்குண்டு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.

வத்தலக்குண்டு தீயணைப்பு நிலைய அலுவலர் விவேகானந்தன் மற்றும் போக்குவரத்து அலுவலர் வெங்கடேசன் தலைமையிலான தீயணைப்பு துறையினர் மலைப்பாம்பை உயிருடன் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் அந்த பாம்பை வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர். வனத்துறையினர் கூறுகையில்,இந்த மலைப்பாம்பு உணவிற்காக  வந்துள்ளது. அத்துடன் பெரிய இரையை உணவாக விழுங்கியுள்ளது. அதனால் நகரமுடியாமல் படுத்திருந்தது. பிடிபட்ட மலைப்பாம்பு வனப்பகுதியில் விடப்பட்டது’’ என்றனர்.

Related Stories:

>