×

ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள திருநங்கைகள், தெருக்கூத்து கலைஞர்கள், பழங்குடியினர்,திரைப்பட தொழிலாளர்களுக்கு ரூ.1000 நிவாரணம் : தமிழக அரசு உத்தரவு

சென்னை:  ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்த தொழிலாளர்களுக்கு தமிழக அரசு மீண்டும் ரூபாய் 1000 நிவாரணத் தொகை வழங்குவதாக அறிவித்துள்ளது. யார் யாருக்கு எல்லாம் வழங்கப்பட உள்ளது என்பதை இப்போது பார்ப்போம்.கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க கடந்த மார்ச் மாதம் 24ம்தேதி நள்ளிரவு நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களுக்கு வேலைக்கு செல்லாமல் வீடுகளுக்குள் முடங்கினர். திரைப்பட தொழிலாளர்கள்,தெருக்கூத்து கலைஞர்கள், பழங்குடியினர், திருநங்கைகள் என விளிம்பு நிலை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் அவர்களுக்கு தமிழக அரசு மீண்டும் ரூ.1000 நிவாரணத்தை அறிவித்துள்ளது. அதன்படி, ஊரடங்கு தொடரும் 4 மாவட்டங்களைச் சேர்ந்த திருநங்கைகள், தெருக்கூத்து கலைஞர்கள், பழங்குடியினருக்கு ரூ.1000 வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள 501 நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. தூய்மை பணியாளர்களுக்கு நிதி உதவி அளிக்க ரூ. 28 லட்சத்தை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. அதே போல் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட திரைப்பட தொழிலாளர்களுக்கு 3-வது முறையாக தமிழக அரசு ரூ.1000 நிதிஉதவி வழங்கியுள்ளது. சென்னை உள்பட 4 மாவட்டங்களிலுள்ள 9,882 பேருக்கு ரூ.1,000 நிதி உதவி அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.


Tags : floods ,street performers ,film workers ,Government of Tamil Nadu , Curfew, transgender, street performers, artists, tribals, film workers, Rs.1000 relief
× RELATED ஆப்கனில் கடும் வெள்ளம்: 33 பேர் பலி