×

கோவையில் பெரியார் சிலைக்கு இரவோடு இரவாக காவி சாயம் பூசப்பட்ட விவகாரம்..: அரசியல் தலைவர்கள் கண்டனம்

கோவை: கோவையில் பெரியார் சிலைக்கு இரவோடு இரவாக காவி சாயம் பூசப்பட்டத்தால் பதற்றம் நிலவி வருகிறது. கோவை சுந்தராபுரத்தில் உள்ள சந்திப்பில் உள்ள பெரியார் சிலைக்கு இரவோடு இரவாக மர்மநபர்கள் காவி வர்ணத்தை தெளித்துள்ளனர். காலையில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டிருப்பது குறித்த தகவல் அறிந்த திராவிடர் கழகம் உள்ளிட்ட பெரியாரிய கருத்தாளர்கள் திரண்டதால் பதற்றம் நிலவியது. பெரியார் சிலையை வமதித்த மர்ம நபர்களை உடனே கைது செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். அண்மை காலமாக பெரியார் சிலை அவமதிப்பு சம்பவங்கள் அடுத்தடுத்து நடப்பதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தலைவர்கள் கண்டனம்

இந்நிலையில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதற்கு தமிழக  அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மோதலை தோடும் மர்மநபர்களை உடனே கைது செய்ய வேண்டும் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் இனியும் தொடராமல் இருக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெரியாறிய கருத்தாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். இதுதொடர்பாக திமுகவின் கோவை மாநகர கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் வெளியிட்ட கண்டன அறிக்கையில், சில சமூக விரோதிகள் , பெரியாரை அவமானப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு தமிழ்நாட்டின் அமைதியை சீர்குலைக்க வி‌ஷமத்தனமாகத் திட்டமிட்டு செயல்படுகிறார்கள். தன் வாழ்நாளிலேயே இது போன்ற தாக்குதல்களை நேரடியாக எதிர்கொண்டு, அஞ்சாமல் போராடி, எதிரிகளைப் பொடிப் பொடியாக்கியவர் தந்தை பெரியார், என்று கூறியுள்ளார். 


Tags : leaders ,Coimbatore ,Periyar , Coimbatore, Periyar statue, saffron paint, political leaders, condemnation
× RELATED ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க...