×

சென்னையில் கொரோனா பெருந்தோற்றாக மாறும் ஆபத்து இனி இருக்காது : கணித அறிவியல் நிறுவனம் நடத்திய ஆய்வில் தகவல்!!

சென்னை : சென்னையில் கொரோனா பெருந்தோற்றாக மாறும் நிலை இனி இருக்காது என்பது புள்ளி விவரம் அடிப்படையிலான ஆய்வில் தெரியவந்துள்ளது. ஜூலை 10 மற்றும் 14ம் தேதி இடையே சென்னை மாநகரில் தொற்று பரவல் கட்டுக்குள் வந்ததை சுட்டிக் காட்டி கணித அறிவியல் நிறுவனம் புள்ளி விவரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. ஒரு நபர் மூலம் இன்றி தொற்று எத்தனை நபர்களுக்கு பரவுகிறது என்ற கணக்கெடுப்பை அந்நிறுவனம் நடத்தி ஆர் வேல்யூ என்று மதிப்பீடு செய்துள்ளது. அதன்படி, தொற்று பரவல் மதிப்பீடு 1%ல் இருந்து 0.78%ஆக குறைந்துவிட்டதை கணித அறிவியல் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

தொழில்நுட்ப ரீதியாக சென்னை இனி கொரோனா பெருந்தொற்று ஆக மாறாது என்று அந்நிறுவனம் கூறியுள்ளது. ஒரு சில இடங்களில் மட்டுமே கொரோனா பாதிப்பு காணப்படும் என்றும் முன்பு போன்ற குறிப்பிட்ட இடம் மூலம் அதிகமாக பரவ வாய்ப்பு இல்லை என்றும் கணித அறிவியல் நிறுவனம் கூறியுள்ளது. கொரோனா பாதிப்பு சென்னையில் 100 என்ற எண்ணிக்கைக்கு குறையும் போது மட்டுமே அதன் ஆபத்து முழுமையாக குறைந்துவிட்டதை உறுதி செய்ய முடியும் என்று தொற்று நோய் சிகிச்சை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி, தமிழகத்தில் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு 1,56,396 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 5,106 பேர் குணமடைந்தனர். மொத்தமாக 1,07, 416 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2236 ஆக உயர்ந்துள்ளது.


Tags : plague ,Mathematical Science Institute ,Chennai , Chennai, Corona, epidemic, risk, science, company
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...