×

பப்புவா நியூ கினியா தீவில் 7.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை!

பப்புவா நியூ கினியா: பப்புவா நியூ கினியா தீவில் இன்று காலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.2 அலகாக பதிவாகியிருந்தது. இதனால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து உடனடியாக தெரிய வரவில்லை. பப்புவா நியூ கினியாவில் இருந்து 174 கி. மீட்டர் தொலைவில் வடகிழக்குப் பகுதியில் உள்ள மோர்ஸ்பை என்ற துறைமுகத்துக்கு அருகே 85 அடி ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்ட இடத்தில் இருந்து சுமார் 300 கி. மீட்டர் தொலைவில் இருக்கும் மக்களும் நிலநடுக்கத்தை உணர்ந்ததாக தெரிவித்துள்ளனர்.

இந்த நிலநடுக்கத்தை அடுத்து எந்தவித சுனாமி எச்சரிக்கையும் விடப்படவில்லை என்று பொது மக்களுக்கான கூகுள் அலர்ட் முதலில் தெரிவித்து இருந்தது. ஆனால், நிலநடுக்கம் ஏற்பட்ட இடத்தில் இருந்து சுமார் 300கி. மீட்டர் தொலைவிற்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் கடுமையாக குலுங்கி தகவல்கள் வெளியாகியுள்ளன.  பொதுவாக பப்புவா நியூ கினியா பகுதியில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டுவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : magnitude earthquake ,Papua New Guinea , Papua New Guinea, earthquake, tsunami alert
× RELATED பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்