×

பாரதிதாசன் பள்ளி 100% தேர்ச்சி

திருவள்ளூர்: திருவள்ளூர் பாரதிதாசன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 அரசு பொது தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த பள்ளியில் 30 சதவீதம் மாணவர்கள் 500 மதிப்பெண்களுக்கு மேலும், 54 சதவீத மாணவர்கள் 450 மதிப்பெண்களுக்கு மேலும் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் 17 மாணவர்கள் 100 க்கு 100 மதிப்பெண்களும், 154 மாணவர்கள் பாடப்பிரிவுகளில் 90 சதவீத மதிப்பெண்களுக்கு மேலும் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிக மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்களை பள்ளித் தாளாளர் மோ.தி.உமாசங்கர், தலைமையாசிரியர்கள் ஜே.மேரி, தா.குமரீஸ்வரி மற்றும் அறங்காவலர், ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

Tags : Bharathidasan School , Bharathidasan School, 100% pass
× RELATED கொடைக்கானல் செல்ல இன்று முதல் இ-பாஸ் தேவையில்லை