×

லடாக்கிலிருந்து படைகளை வாபஸ் பெறுவது சிக்கலானது: இந்திய ராணுவம் தகவல்

புதுடெல்லி: கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலில், இந்திய வீரர்கள் 20 பேரை சீன ராணுவம் கொன்றதால், எல்லையில் இருநாடுகளுக்கும் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. கல்வான் உட்பட பல இந்திய பகுதிகளில் சீன ராணுவம் ஊடுருவி இருப்பதால் இந்த சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில், சீன படைகளை வாபஸ் பெற வைப்பது தொடர்பாக இருநாடுகளுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தைகளால், சீன ராணுவம் வாபஸ் பெறப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்தியா-சீனா இடையே 4வது கட்ட பேச்சுவார்த்தை கடந்த செவ்வாயன்று தொடங்கியது. செவ்வாயன்று காலை 11 மணிக்கு தொடங்கிய பேச்சுவார்த்தை நேற்று முன்தினம் நள்ளிரவு 2 மணி வரை நீடித்தது. இது தொடர்பாக இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இருநாட்டு ராணுவ தளபதிகளும் முதல்கட்டமாக வீரர்களை திரும்ப பெறுவதில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து மதிப்பாய்வு செய்தனர். படைகளை வாபஸ் பெறுவதில், இரு நாடுகளும் உறுதியாக உள்ளன. கிழக்கு லடாக்கில் படைகளை திரும்பபெறும் செயல்முறை சிக்கலானது. அதை தீவிரமாக கண்காணிக்க வேண்டியுள்ளது.,’ என கூறப்பட்டுள்ளது.

Tags : troops ,Indian Army ,Ladakh , Ladakh, Force, Withdrawal, Complex, Indian Army, Information
× RELATED நாமக்கல் அருகே தொழிலதிபர் வீட்டில்...