ஒபாமா, பில்கேட்ஸ் டிவிட்டரில் அத்துமீறல் சிங்கத்தோட கணக்குலயே கை வைச்சுட்டாங்கய்யா!: 1,000 போட்டால் 2,000 தருவதாக ஹேக்கர்கள் சில்மிஷம்

நியூயார்க்: அமெரிக்காவில் முன்னாள் அதிபர் ஒபாமா, மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ், டெல்ஸ்கா சிஇஓ எலன் மாஸ்க் ஆகியோரின் டிவிட்டர் கணக்குகள் நேற்று ஒரே நேரத்தில் ஹேக் செய் யப்பட்டுள்ளது. மேலும், முன்னாள் துணை அதிபரும், தற்போதைய ஜனாதிபதி வேட்பாளருமான ஜோ பிடென் கணக்கையும் ஹேக்கர்கள் பிளாக் செய்துள்ளனர். ஹேக் செய்யப்பட்ட பிரபலங்களின் கணக்கில் இருந்து பிட்காயின் அனுப்பக்கோரி டிவிட் செய்யப்பட்டுள்ளது. பிட்காயின் ஊழல் என்று அழைக்கப்படும் இந்த சம்பவத்தில் ஹேக் செய்யப்பட்டவர்களின் டிவிட்டர் கணக்குகளில் இருந்து பிட்காயின் எனப்படும் கிரிப்டோகரன்சிகளை நன்கொடையாக வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது. ஆயிரம் அமெரிக்க டாலர்களை குறிப்பிட்ட பிட்காயின் முகவரிக்கு அனுப்பினால் 2000 டாலர் திருப்பி அனுப்பப்படும் என இவர்கள் கணக்கில் டிவிட் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இவர்களின் கணக்கு ஹேக் செய்யப்பட்டதை அறிந்த டிவிட்டர் நிர்வாகம் உடனடியாக இதனை தடுத்துள்ளது.

* பயங்கரமாக உணர்கிறோம்

டிவிட்டர் தலைமை நிர்வாகி நேற்று முன்தினம் இரவு வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘டிவிட்டரில் இது எங்களுக்கு மிகவும் கடினமான நாளாகும். இதுபோன்று நடந்ததை நாம் அனைவரும் பயங்கரமாக உணர்கிறோம். என்ன நடந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். எங்களால் முடிந்த அனைத்தையும் பகிர்ந்து கொள்வோம்,’ என்று கூறியுள்ளார்.

* சீனா ஆப்ஸ்களுக்கு அடுத்த வாரம் தடை?

லடாக்கில் நடந்த மோதலை தொடர்ந்து, சீனாவை சேர்ந்த டிக்டாக், ஷேர் இட் உட்பட 59 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. அமெரிக்காவில் 4 கோடி பேர் டிக்டாக்கை பயன்படுத்துகின்றனர். இந்நிலையில், சீன செயலிகளுக்கு தடை விதிக்கப் போவதாக அதிபர் டிரம்ப்பும் கூறி வருகிறார். நேற்று முன்தினம் அவர் அளித்த பேட்டியில், ‘‘சீன செயலிகளுக்கு தடை விதிப்பது குறித்து அடுத்த சில வாரங்களில் முடிவு எடுக்கப்படும்,” என்றார்.

Related Stories:

>