×

சிறப்பு ஒப்பந்தம் மூலம் அமெரிக்கா, பிரான்சுக்கு இன்று முதல் விமானம்: அமைச்சர் ஹர்தீப் சிங் தகவல்

புதுடெல்லி: இந்தியா - அமெரிக்கா - பிரான்ஸ் இடையே சிறப்பு ஒப்பந்தம் அடிப்படையில் இன்று முதல் ஜூலை 31 வரை விமானங்கள் இயக்கப்பட உள்ளன. இந்தியாவில் கொரோனா பரவலைத் தடுக்க, சர்வதேச விமானங்கள் கடந்த மார்ச் 23ம் தேதியில் இருந்தும், உள்நாட்டு விமான சேவை மார்ச் 25ம் தேதி முதலும் முழுவதுமாக நிறுத்தப்பட்டது. இதனிடையே, வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை தாயகம் அழைத்து வர வந்தே பாரத் சிறப்பு விமான சேவை செயல்படுத்தப்பட்டு வருகிறது.  இந்நிலையில், விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் நேற்று அளித்த பேட்டி:

ஏர் பிரான்ஸ் விமானம் பாரீசில் இருந்து டெல்லி, மும்பை, பெங்களூருவுக்கு நாளை முதல் ஆகஸ்ட் 1ம் தேதி வரை 28 விமானங்களை இயக்க உள்ளது. அதேபோல், அமெரிக்காவின் நேவர்க்கில் இருந்து டெல்லிக்கு தினசரியும், சான்பிரான்சிஸ்கோ-டெல்லி மார்க்கத்தில் வாரத்துக்கு 3 விமானங்களையும் யுனைடெட் ஏர்லைன்ஸ் இயக்க இருக்கிறது. இதே போன்று, லண்டனில் இருந்து டெல்லிக்கு தினமும் இரண்டு விமானங்களை இயக்க அந்நாட்டு அரசுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஜெர்மனியில் இருந்தும் அவர்களின் நாட்டில் இருந்து விமானங்களை இயக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக லுப்தான்சா ஏர்லைன்சுடன் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


Tags : Hardeep Singh ,flight ,France ,US , Special Agreement, USA, France, from today, Aviation, Minister Hardeep Singh, Information
× RELATED சென்னையில் இருந்து மொரிஷியஸ்...