×

கல்வி அலுவலருக்கு 7 ஆண்டு சிறை

விழுப்புரம்: உளுந்தூர்பேட்டையில் கடந்த 1993-1995ல் உதவி தொடக்க கல்வி அலுவலராக இருந்த ரகுபதி(73), இளநிலை உதவியாளர் அமானுல்லா (68), பாலி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பொன்கண்ணன்(85) ஆகியோர் ஆசிரியர்களுக்கான சம்பள பணம் ரூ.7,40,087 கையாடல் செய்ததாக கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை விழுப்புரம் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மோகன் விசாரித்து, ரகுபதி, அமானுல்லாவுக்கு 7 ஆண்டு சிறை, பொன்கண்ணனுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்தார்.


Tags : education officer , To Education Officer, 7 years, imprisonment
× RELATED போலி ஆவணங்கள் தயாரித்து மூதாட்டி...