×

கருவில் மட்டும் அல்ல தாய்ப்பாலில் சென்றும் குழந்தையை தாக்கும்: இன்னொரு புதிய கண்டுபிடிப்பு

கொரோனா வைரஸ் மனிதனின் எந்ததெந்த உறுப்புகளை தாக்கும், எப்படி தாக்கும் என்பது பற்றி தினமும் ஒரு ஆய்வு முடிவு வெளியாகிக் கொண்டிருக்கிறது. இது, மக்களை ஒருவகையில் குழப்புகிறது. மறுபக்கம், அதிர்ச்சி அடைய வைக்கிறது. இந்த  ஆய்வு வரிசையில், கர்ப்பத்தில் இருக்கும் சிசுவையும் கொரோனா தாக்கும் வாய்ப்புகள் உள்ளதாக புதிய ஆய்வு முடிவு வெளியிடப்பட்டு இருக்கிறது. அந்த ஆய்வு முடிவில் இடம் பெற்றுள்ள தகவல்கள்: பெரும்பாலான வைரஸ்கள் நச்சுக்கொடி மூலம் கர்ப்பிணி பெண்ணின் கருப்பைக்கு சென்று கருவை பாதிக்கின்றன. அதேபோல், கொரோனா வைரஸ் கர்ப்பிணி பெண்கள் மூலம் அவர்களின் கர்ப்பத்தில் உள்ள குழந்தையை பாதிப்பதற்கான வாய்ப்புகள் தற்போது அதிகரித்துள்ளது.

சமீபத்தில், இத்தாலியில் கொரோனா பாதித்த 31 கர்ப்பிணி பெண்கள் கடந்த மார்ச், ஏப்ரலில் குழந்தை பெற்றனர். இதில், அவர்களின் தொப்புள் கொடி ரத்தம், நஞ்சுக்கொடி, தாய்ப்பாலில் கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு குழந்தைக்கு மட்டும் தொப்புள் கொடி ரத்தம், நஞ்சுக் கொடியில் வைரஸ் காணப்பட்டது. மற்றொரு குழந்தைக்கு எதிர்ப்பு ஆற்றல் இருந்ததால், வைரசால் நஞ்சுக்கொடியை கடந்து செல்ல முடியவில்லை பிரான்சில் நடத்தப்பட்ட ஆய்வில், கருவில் உள்ள குழந்தையை கொரோனா தாக்கும் என்பது உறுதியாகி உள்ளது. இதுவரை, கர்ப்பத்தின், கடைசி காலத்தில் வைரஸ் பாதித்த பெண்களிடம் தான் அதிகளவில் ஆய்வுகள் நடந்துள்ளது. அதனால், கர்ப்பத்தின் ஆரம்ப நிலையில் கொரோனா பாதித்த பெண்களிடம் அதிக ஆய்வுகள் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

* அனைத்து கால கட்டத்திலும், கர்ப்பிணி பெண்கள் தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள, பொது இடங்களுக்கு செல்லும் போது முகக்கவசம் அணிய வேண்டும்.
* கைகளை அடிக்கடி கழுவ வேண்டும்.
* குறைந்தப்பட்சம் 6 அடி சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் - ஆய்வில் தகவல்

Tags : baby ,fetus , In the womb, breastfeeding, going, attacking the baby, new invention
× RELATED ஜெய், யோகி பாபு இணையும் பேபி அன்ட் பேபி