×

கொரோனா நிதி விபரங்களை இணைய தளத்தில் வெளியிட வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னையைச் சேர்ந்த வக்கீல் கற்பகம், உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்து வழக்கில் கூறியிருப்பதாவது:
முதல்வர் பொது நிவா ரண நிதி இணையதளத்தில், நிதி வழங்கியவர்கள் யார் யார்? பயனாளிகள் யார் யார்? என்பன உள்ளிட்ட எந்த விபரங்களும் குறிப்பிடப்படவில்லை. வெளிப்படைத்தனமையோடு மக்கள் அறிந்துகொள்ளும் வகையில் இந்த விவரங்களை வெளியிட உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்எம் சுந்தரேஷ், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் பிரபாகர், மற்ற மாநிலங்களில் வெளிப்படையாக இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும், ஆனால் தமிழகத்தில் தான் வெளியிடப்படவில்லை என்றும் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், எவ்வளவு நிதி பெறப்பட்டது என்பது குறித்து இணையதளத்தில் வெளியிட என்ன சிரமம் உள்ளது என்று அரசு தரப்பிடம் கேட்டனர். இதைதொடர்ந்து, கொரோனா நிவாரண நிதி கொடுத்த நன்கொடையாளர்களின் பெயர்கள், பயனாளிகள் யார்? எப்படி நிதி நிர்வகிக்கப்படுகிறது ?என்பன உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அரசு இணையதளத்தில் 8 வாரத்தில் வெளியிட வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

Tags : Corona ,Govt ,High Court , Corona Finance, Website, Publish, Government, High Court
× RELATED ஈஷா யோகா மையத்தில் பணியாற்றிய 6 பேர்...