×

கலை-அறிவியல், பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் ஆன்லைன் அட்மிஷன்: உயர்கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர்வதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறையை உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. கொரோனா காரணமாக இந்த ஆண்டு இன்ஜினியரிங் அட்மிஷன் ஆன்லைனில் நடக்கிறது. இந்நிலையில் பிளஸ் 2 ரிசல்ட் வெளியாகி உள்ளது. இதனால் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எப்படி இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் உயர்கல்வித்துறை வெளிட்ட அறிக்கை:தமிழகத்தில் தற்போது உயர்கல்வித்துறையின் கீழ் 109 கலை அறிவியல் கல்லூரிகள், இயங்கி வருகின்றன.

இவற்றில் சுமார் 92 ஆயிரம் இளநிலை பட்டப் படிப்புக்கான இடங்கள் உள்ளன. அதேபோல, தமிழகத்தில் உயர்கல்வித்துறையின் கீழ் 51 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. மற்றும் தொழில் வணிகத் துறையின் நிர்வாக கட்டுப்பாட்டிலும் தொழில் நுட்பக் கல்வித்துறையின் கல்வி பாடத்திட்டத்தின் கீழ் வரக்கூடிய 3 இணைப்பு பெற்ற கல்லூரிகளையும் சேர்த்து மொத்தமாக 16 ஆயிரத்து 890 இடங்கள் உள்ளன.  இதற்காக புதிய முயற்சியாக அரசு கலை அறிவியல் கல்லூரிகளுக்கு www.tngasa.in மற்றும் www.tndceonline.org ஆகிய இணைய தள முகவரியிலும், பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு www.tngptc.in மற்றும் www.tnggptc.com என்ற இணைய தள முகவரியிலும் விண்ணப்பிக்கலாம்.
மாணவர்கள் 20ம் தேதி முதல்  இணைய தளங்களின் மூலம் பதிவு செய்யலாம். மேலும் 044-22351014, 044-22351015 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Tags : Arts and Sciences, Polytechnic College, Online Admission, Higher Education
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...