×

கோவையில் பாதாள சாக்கடை கழிவுகளை அகற்ற ரோபோவை அறிமுகம் செய்து வைத்தார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி!!

சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ளும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பிற மாநிலங்கள் பாராட்டி வருவதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.கோவை மாவட்டத்தில் கழிவு நீர் அகற்றும் ரோபோ எந்திரத்தை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.

 இதனைத் தொடர்ந்து, கோவை மாநகராட்சி அலுவலகத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு திட்டங்களின் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனாவில் இருந்து மக்களை காக்க தமிழக அரசு சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்தார். கோவை மாநகராட்சியில் மனிதக்கழிவுகளை மனிதனே அகற்றும் நடைமுறை 100 சதவீதம் ஒழிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

இந்த நிலையில், அமைச்சர் வேலுமணி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், கோவை மாநகராட்சிக்கு பாரத பெட்ரோலிய நிறுவனம் வழங்கியுள்ள பாதாள சாக்கடை கழிவுகளை அகற்றும் ரோபோடிக்  2.0 என்ற 5 இயந்திரங்களை, மாநகராட்சியில் உள்ள 5 மண்டலங்களுக்கு இன்று ஒப்படைத்தேன்.அடுத்தக்கட்டமாக தமிழகத்தில் உள்ள 34 நகரங்களுக்கு 34 ரோபோடிக் 2.0 நவீன இயந்திரங்கள் வாங்கப்பட உள்ளன.மனித கழிவுகளை மனிதரே அகற்றும் அவலத்தை போக்க தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம், என்றார்.


Tags : SB Velumani ,Coimbatore , Coimbatore, Sewerage, Waste, Robot, Introduction, Minister SB Velumani
× RELATED வெறும் 3% ஓட்டுதான்பாஜ பத்தி பேசி...