×

தங்கக் கடத்தல் விசாரணை தீவிரமைடைந்துள்ள நிலையில் திருவனந்தபுரத்தில் இருந்து தீடிரென வெளியேறினார் யு.ஏ.இ. துணைத்தூதர்!

திருவனந்தபுரம் : திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரசு அமீரக தூதரக துணை அதிகாரி ரஷீத் தீடிரென வெளியேறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தை உலுக்கிய தங்கக் கடத்தல் தொடர்பாக என்ஐஏ விசாரணை மேற்கொண்டுள்ளது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட தூதரக முன்னாள் ஊழியரும், கேரள அரசின் தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்தவருமான ஸ்வப்னா சுரேஷ் மற்றும் அவரது கூட்டாளி சந்தீப் நாயர், தூதரக முன்னாள் ஊழியர் சரித்குமார், சந்தீப் நாயன் மனைவி சௌமியா, ரமீஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். என்ஐஏ விசாரணை ஒருபுறமிருக்க, தங்க கடத்தலில் தொடர்புடைய நபர்கள் அடுத்தடுத்து சுங்கத்துறையினரால் கைது செய்யப்படுகின்றனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தில் உள்ள சில அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

எனவே அவர்களும் விசாரணைக்கு உட்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், யு.ஏ.இ. துணைத்தூதர் ரஷீத் அல் சலாமி நாட்டை விட்டே வெளியேறியுள்ளார். திருவனந்தபுரத்தில் இருந்து 3 நாட்களுக்கு முன் டெல்லி சென்று அங்கிருந்து அவர் துபாய் சென்றுள்ளது தற்போது தெரிய வந்துள்ளது. ரஷீத் அல் சலாமியின் வேண்டுகோளின்படியே ஸ்வப்னாவுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டதாக கேரளா மாநில அரசில் உள்ள சில உயரதிகாரிகள் என்.ஐ.ஏ. மாறும் சுங்கத்துறை அதிகாரிகளிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர். எனவே ரஷீத் அல் சலாமியம் விசாரிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் அவர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதனால் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்படுவாரா? அவரை இந்தியாவுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படுமா? என்.ஐ.ஏ. மாறும் சுங்கத்துறை அதிகாரிகளின் அடுத்தகட்ட நகர்வு என்ன? என்பன போன்ற கேள்விகள் எழுந்துள்ளன.



Tags : UAE ,Thiruvananthapuram ,Consul ,India ,Kerala ,consulate admin attache , Kerala, Gold Smuggling, UAE, Ambassador, Rashid Al Salami, Thiruvananthapuram
× RELATED கனமழையால் ஐக்கிய அரபு அமீரகத்தில்...